ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி

கருங்கல், ஜூலை 5: கிள்ளியூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தின் கீழ் விவசாய பயிர்களுக்கான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்தல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடந்தது. வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவர் கீழ்குளம் கோபால் தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி ராகிணி பேசினார். அக்ரி ராஜ்குமார் பயிற்சி அளித்தார். துணை வேளாண்மை அலுவலர் ஜெகன்ஸ் பாபு, வேளாண்மை அலுவலர் கீதா ஆகியோர் விளக்கம் அளித்தனர். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: