தீவன விரயத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் 3000 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.5 கோடி செலவில் வழங்கப்படும், ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் விவசாயிகளின் 2000 ஏக்கர் பாசன நிலங்களில் பசுந்தீவன உற்பத்தி மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த சுகாதாரத்தின் கீழ் 5 லட்சம் செல்லப்பிராணிகளுக்கு ரூ.1 கோடியில் 50 விழுக்காடு மானியத்தில் வெறிநாய் கடி நோய் தடுப்பூசி போடப்படும். கால்நடை நிறுவனங்களில் நவீன நோய் அறியும் கருவிகளை கையாளுவதற்கு என 400 கால்நடை மருத்துவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.1 கோடியில் அளிக்கப்படும். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு விடுதி கட்டப்படும்.
The post கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு 50% மானியத்தில் கோழி குஞ்சுகள்; அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு appeared first on Dinakaran.