கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவரச ஆலோசனை..!!

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவரச ஆலோசனை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 28 பேர், சேலம் மருத்துவமனையில் 16 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 87 பேருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஷச் சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்களுடன் காணொளி காட்சி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அறிவுறுத்தல்களையும் தலைமைச் செயலாளர் ஆலோசனையில் வழங்குவார். இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வருக்கு தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை ஒன்றை அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவரச ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: