×
Saravana Stores

மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை இன்று இலவசமாக பார்வையிடலாம்

சென்னை: இந்தியாவில், தோன்றிய உடற்பயிற்சி தியான முறையான யோகாசனத்தின் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

யோகா வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நாளில் மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உலக யோகா தினம் முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம், என்று தொல்லியல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை இன்று இலவசமாக பார்வையிடலாம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,CHENNAI ,India ,International Yoga Day ,11th International Day of Yoga ,
× RELATED 21 ஆண்டுகளுக்கு பிறகு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம்