×

சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னை : சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.வெடிகுண்டு மிரட்டலையடுத்து விமான ஓடு தளத்தில் பயணிகளின் உடைமை இறக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாகவே போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு முறை மிரட்டல் வரும் போதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்து வருவதும் வழக்கமாகி கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து 6வது முறையாக, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் உயர்மட்டக்குழு நடந்தது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று 6வது முறையாக வந்த மிரட்டல் கடிதத்தில், சென்னையிலிருந்து துபாய் செல்லக்கூடிய எமிரேட்ஸ் விமானத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டு அதிலிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடத்திய பின்னர் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதியானதால் விமானம் புறப்பட்டு செல்ல அனுமத்திக்கப்பட்டது. அதே போல் சென்னையிலிருந்து செல்லக்கூடிய துபாய், ஷார்ஜா போன்ற விமானங்கள் தீவிர சோதனைகள் நடத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dubai ,Dinakaran ,
× RELATED சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்