×

தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 2024-ம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் கொந்தகையில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் அகழாய்வு பணி தொடக்கம். புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூரில் அகழாய்வு பணி தொடக்கம். திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூரில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

1.5 ஏக்கர் நிலத்தில் 12 குழிகள் வெட்டப்பட்டு 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறவுள்ளன. சிவகங்கை திருப்புவனம் அருகே கீழடியில் இதுவரை 9 கட்ட அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல்துறை, 6 கட்ட அகழாய்வை மாநில தொல்லியல்துறை மேற்கொண்டது. முதலமைச்சர் ஏப்.6இல் தொடங்கி வைத்த 9ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் செப்டம்பரில் நிறைவடைந்தன. 10ஆம் கட்டமாக 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி பெரும்பாலை தளத்தில் மேற்கொண்ட அகழாய்வின் அறிக்கையையும் முதல்வர் வெளியிட்டார்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, சங்க கால வரலாற்று சின்னங்களைக் கொண்ட பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் கோட்டை சுவர், அரண்மனை திடல் போன்ற இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் சார்பில் கடந்த ஆண்டு மே முதல் டிசம்பர் வரை முதற்கட்ட அகழாய்வு நடைபெற்றது. அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையிலானோர் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வில் ஈடுபட்டனர்.

அப்போது கிடைக்கப்பெற்ற தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவி, பாசி மணி, பல விதமான பானை ஓடுகள் உள்ளிட்ட தொல் பொருட்கள் குறித்த விரிவான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், 2-ம் கட்ட அகழாய்வு பணிக்கும் அனுமதி கோரப்பட்டது.

மேலும், அகழாய்வு பணிக்கு புதிதாக இடங்கள் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 10-ம் கட்ட அகழாய்வு பணிக்கு அரசு அனுமதி அளித்தது. அகழாய்வுப் பணிகளை சென்னையில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

The post தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu ,Chennai ,M.K.Stalin ,Chennai Chief Secretariat ,Department of Archeology of Tamil Nadu ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...