×

புளிய மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாப பலி

புவனகிரி, ஜூன் 18: பரங்கிப்பேட்டை அருகே உள்ள குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (60). இவர் கடந்த 14ம் தேதி அப்பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் ஏறி புளி உலுக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து விஸ்வநாதன் தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி விஸ்வநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் பிரித்திவிராஜன் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புளிய மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Bhubanagiri ,Viswanathan ,Kuchchipalayam village ,Parangipete ,Vishwanathan ,Dinakaran ,
× RELATED புவனகிரியில் திருமணம் ஆகி 10 மாதங்களே...