×

வீட்டின் உரிமையாளர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது

தண்டையார்பேட்டை: ராயபுரம் ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (22). இவருக்கு சொந்தமான வீட்டில் நரசிம்மலு (40) என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர், வாடகை சரிவர கொடுக்காததால், ராஜேஸ்வரிக்கும், நரசிம்மலுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் வீட்டை காலி செய்த நரசிம்மலு, அதே பகுதியில் வேறு வீட்டில் வாடகைக்கு சென்றார்.

இந்நிலையில், ராஜேஸ்வரி குறித்து இவர் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வந்துள்ளார். இதுபற்றி அறிந்த ராஜேஸ்வரி, ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிம்மலுவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டின் உரிமையாளர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Rajeshwari ,Anjaneyar Nagar, Rayapuram ,Narasimmalu ,Narasimmal ,Dinakaran ,
× RELATED பலத்த காற்றுடன் மழை தகர ஷீட் பறந்ததில் 2 பேர் படுகாயம்