×

வழக்கமான இடத்திலேயே மாங்கனி கண்காட்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 16: கிருஷ்ணகிரியில், அகில இந்திய மாங்கனி கண்காட்சியினை வழக்கமான இடத்திலேயே நடத்திட வேண்டுமென நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி நகர்மன்ற கூட்டம், தலைவர் பரிதாநவாப் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆணையாளர் ஸ்டான்லிபாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிருஷ்ணகிரி நகரில் 29 ஆண்டுகளாக மாங்கனி கண்காட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக விளங்க கூடிய இந்த மாங்கனி கண்காட்சியை, தொடர்ந்து நகர எல்லை பகுதியில் அதே இடத்தில் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி நகரில் வழக்கமாக நடைபெறும் இடத்திலேயே, மாங்கனி கண்காட்சியை நடத்த வேண்டும் என்று நகராட்சி சார்பில், கலெக்டரை கேட்டுக் கொள்வது. கட்டிகானப்பள்ளி ஊராட்சியை கிருஷ்ணகிரி நகராட்சியுடன் விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post வழக்கமான இடத்திலேயே மாங்கனி கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Mangani Exhibition ,Krishnagiri ,All India Mangani Exhibition ,Krishnagiri Municipal ,Council ,President ,Paridhan Nawab ,Commissioner ,Stanley Babu ,Mangani ,Dinakaran ,
× RELATED மாயமான முதியவர் சடலமாக மீட்பு