×

4 மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் 2 நாட்கள் செயல்படாது: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: கழிவுநீர் பிரதான குழாய்கள் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், 4 மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் 2 நாட்கள் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் மாதவரம் மண்டலம், 200 அடி சாலையில் அமைந்துள்ள எம்.எம்.பி.டி சேவை சாலையில் லோகோ டவர் அருகில் கழிவுநீர் பிரதான குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் வரும் 18ம் தேதி காலை 9 மணி முதல் 20ம் தேதி காலை 6 மணி வரை (2 நாட்கள் மட்டும்) மண்டலம் 3, 6, 7 மற்றும் மண்டலம் 8க்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.

எனவே, மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால் அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இதற்காக 3வது மண்டல பகுதி பொறியாளரை 81449 30903 என்ற எண்ணிலும், 6வது மண்டல பகுதி பொறியாளரை 81449 30906 என்ற எண்ணிலும், 7வது மண்டல பகுதி பொறியாளரை 81449 30907 என்ற எண்ணிலும், 8வது மண்டல பகுதி பொறியாளரை 81449 30908 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 4 மண்டலங்களில் உள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் 2 நாட்கள் செயல்படாது: குடிநீர் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Drinking Water Board ,CHENNAI ,Chennai Water Board ,Chennai Drinking Water Board ,Dinakaran ,
× RELATED பிரதான உந்து குழாயில் இணைப்பு பணி 5...