×

நிதிமோசடி 166% அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கடந்த நிதியாண்டில் நிதி மோசடியின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.13,930 கோடி அளவுக்கு பொதுமக்கள் பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் பெரும்பாலான மக்கள் இணையவழி பணப் பரிவர்த்தனை தளமான ‘யுபிஐ’ மற்றும் கிரெடிட் கார்டுகளில் பணப்பரிவர்த்தனை செய்கின்றனர். ஆனால் அதில் அதிகப்படியான மோசடிகள் பதிவாகியுள்ளன.

இணையவழி நிதி மோசடி தொடர்பாக 302 மாவட்டங்களில் 23,000 பேரிடம் ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில், ‘53 சதவீதம் மக்கள் தங்களது கிரெடிட் கார்டுகளில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிகர்கள் அல்லது இணையதளங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைச் சுமத்தியுள்ளனர். 36 சதவீதம் மக்கள் இணையவழி பணப் பரிவர்த்தனை தளமான ‘யுபிஐ’யில் நிதி மோசடியை எதிர்கொண்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில், நிதி மோசடியில் சிக்கிய 10ல் 6 இந்தியர்கள், தங்களது மோசடி குறித்து ரிசர்வ் வங்கி அல்லது சட்ட அமலாக்க நிறுவனங்களிடம் புகாரளிக்கவில்லை.

ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் நிதி மோசடியின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.13,930 கோடி அளவுக்கு பொதுமக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே நிதி மோசடிகளைத் தடுக்க பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அவசரத் தேவை உள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

The post நிதிமோசடி 166% அதிகரிப்பு: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,UPI ,Dinakaran ,
× RELATED எலான் மஸ்க் கருத்தால் சமூக ஊடகங்களில்...