×

குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்

 

சிவகங்கை, ஜூன் 15: சிவகங்கை மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான, போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதலின் ஒரு பகுதியாக, கல்லூரி மாணவர்களிடையே குறும்படம் எடுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசும், பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி மாணவிகள் இரண்டாம் பரிசும் பெற்றனர். மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷாஅஜித் வழங்கினார்.

The post குறும்பட போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Tirupattur ,Dinakaran ,
× RELATED 1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற...