×
Saravana Stores

கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு என கூறி 300 பேரிடம் ரூ. 4 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

கடலூர்: கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு என்று கூறி 300 பேரிடம் ரூ. 4 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்ட 2 பெண்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சித்திரை பேட்டையை சேர்ந்த ரெஜினா கும்பகோணத்தில் உள்ள கிரிப்டோ கன்சல்டென்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் நிர்வாக அலுவலராக கும்பகோணத்தை சேர்ந்த அர்ஜுன் கார்த்திக் செயல்பட்டு வருவதாகவும் தான் அதில் ஏஜெண்டாக செயல்பட்டு வருவதாக பலரிடம் கூறிவந்துள்ளார்.

அந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 18 மாதத்திற்கு மாதம் ரூ.15,000 வீதம் நிறுவனம் வழங்கும், பிறகு அசல் பணத்தை திருப்பிகொடுத்துவிடுவதாக கூறியுள்ளார். மேலும் அந்த நிறுவனத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பலரிடம் பணம் வசூல் செய்து முதலீடு செய்துள்ளதாகவும், இதன் மூலம் பலர் பயனடைந்துள்ளதாகவும் தெரித்துள்ளார். இதனை நம்பி பலர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பணம் கட்ட தொடங்கியுள்ளனர்.

ரூ.2 லட்சம் பணம் கொடுத்தவர்களுக்கு அடுத்த மாதம் லாபத் தொகையாக ரூ.30,000 கொடுத்துள்ளார். இதனால் அவரை முழுமையாக நம்பி பலர் பணம் கட்டியுள்ளனர். அதில் அவருக்கு உதவியாக சித்திரை பேட்டையை சேர்ந்த சங்கீதா என்பவரும் இருந்துள்ளனர். இந்த அலுவலகம் கடலூரில் செயல்பட்டுவந்ததால் அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளனது. இதனையடுத்து கடலூரில் உள்ள சுமார் 300 பேரிடம் ரூ.4கோடி பணம் பெற்றுள்ளார். அதன்பின்னர் முதலீடு செய்தவர்களுக்கு எந்தவித பணமும் தரவில்லை.

இது குறித்து கேட்டபோது நிர்வாக இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும் என கூறிவிட்டார். இதனை அடுத்து கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் கடலூரில் உள்ள அலுவலகத்தை பூட்டிவிட்டு 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதன் மூலம் ரூ.4 கோடி மோசடி செய்து ஏமாற்றிவிட்ட நிலையில் அந்த பணத்தை பெற்று தர கோரி பலர் கடலூர் குற்றபிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். புகார் மனுக்களை பெற்ற பெற்ற போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் ஏறத்தாள ஓராண்டுகழித்து தலைமறைவாக இருந்த ரெஜினா மற்றும் சங்கீதா புதுச்சேரியில் உள்ள வங்கிக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது. இதனை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு என கூறி 300 பேரிடம் ரூ. 4 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Economic Crime Police ,Regina Kumbakonam ,Cuddalore District ,Chitra Pattai ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு