குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் கொடை விழா 3001 திருவிளக்கு பூஜை வழிபாடு

ஆலங்குளம்,ஜூன் 11: ஆலங்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கொடை விழாவில் 3001 திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர். ஆலங்குளம் அருகே குருவன்கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கடைசி வாரம் கொடை விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 8ம் தேதி கொடை விழா தொடங்கியது. அன்று மாலை பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பெண்கள், சிறுமிகள் கையில் பூந்தட்டுடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி செய்து வழிபட்டனர். மாலை 6 மணிக்கு 3001 திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து பெண்கள் வழிபட்டனர். நேற்று இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு மாகாப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி, காலை 9 மணிக்கு இலை சுற்றி விநாயகர் கோயிலிருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி நேமிதங்கள் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசிக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. நாளை மதியம் உச்சி கால பூஜையுடன் கொடை விழா நிறைவு பெறுகிறது. விழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் கொடை விழா 3001 திருவிளக்கு பூஜை வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: