×

குஜராத்தில் பாஜவின் வாக்கு சதவீதம் சரிவு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 3வது முறையாக 26க்கு 26 தொகுதிகளையும் கைப்பற்ற பாஜ தவறி விட்டது. கடந்த 2014, 2019 மக்களவை தேர்தலில் பாஜவின் கோட்டையான குஜராத்தில் அக்கட்சி 26 தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் இம்முறை காங்கிரஸ் 10 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக குஜராத்தில் ஒரு தொகுதியை கைப்பற்றி உள்ளது. அதுமட்டுமின்றி, குஜராத்தில் பாஜவின் வாக்கு சதவீதமும் சரிந்துள்ளது. கடந்த 2019ல் 63.11 சதவீத வாக்குகள் பெற்ற பாஜ இம்முறை 61.86 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 1.25 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன. அதே சமயம் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 33.93 ஆக உள்ளது. இதில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் 31.24 ஆகவும், ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 2.69 ஆக உள்ளது.

The post குஜராத்தில் பாஜவின் வாக்கு சதவீதம் சரிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Gujarat ,AHMEDABAD ,Lok Sabha elections ,Congress ,Dinakaran ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...