- அமைச்சர் அமித் ஷா
- பஞ்சாப் அரசு
- தில்லி
- முதல்வர்
- கெஜ்ரிவால்
- சண்டிகர்
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- மத்திய உள்துறை அமைச்சர்
- அமித் ஷா
- ஆத்மி கட்சி அரசு
- பஞ்சாப்
- லூதியானா
சண்டிகர்: பஞ்சாபில் ஆளும் ஆத்மி அரசை கவிழ்த்துவிடுவோம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மிரட்டுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாபின் லூதியானாவில் நேற்று முன்தினம் பிரசார கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை தேர்தலில் பாஜ வெற்றிக்கு பின் ஆம் ஆத்மி அரசு கவிழும் என்று கூறியிருந்தார். ஜூன் 4ம் தேதி பிறகு பக்வந்த் மான் முதல்வராக இருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அமைச்சர் அமித் ஷாவின் இத்தகைய பேச்சு சர்வாதிகார போக்கை காட்டுவதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அமிர்தசரசில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், “அமித் ஷாவின் அறிக்கையை கேட்டீர்களா? அவர் மிரட்டல் விடுக்கிறார். முதலில் அவர் பஞ்சாப் மக்களை மிகவும் அவமதித்துவிட்டார். ஜூன் 4ம் தேதிக்கு பின் பஞ்சாப் அரசு கவிழ்ந்துவிடும் என்று மிரட்டுகிறார். பக்வந்த் மான் முதல்வராக இருக்கமாட்டார் என்கிறார். எங்களிடம் 92 எம்எல்ஏக்கள் உள்ளனர். நீங்கள் எப்படி அரசை கவிழ்ப்பீர்கள்?. நாட்டில் சர்வாதிகாரம் உள்ளது” என்றார்.
The post பஞ்சாப் அரசை மிரட்டுகிறார் அமைச்சர் அமித் ஷா: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.