×

ஆக்கிரமிப்பால் பணிகள் பாதிப்பு

 

ராமேஸ்வரம், மே 27: ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆக்கிரமிப்பால் இறங்கு தளம் கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகதத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மீன் இறங்கு தளம் முற்றிலும் சேதம் அடைந்து ஒரு பகுதி இடிந்தது. இதனால் மீன்பிடித் துறைமுகம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பல கோடி மதிப்பில் தற்போது புதிய மீன் இறங்கு தளம் 200 அடி நிலமும்,150 அடி அகலத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிடித்து வரும் மீன்களை இறக்குவதற்கு மீன் இறங்குதளம் இன்றி கடந்த பல மாதங்களாக மீனவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் புதிய மீன் இறங்குதளம் தடைக்காலம் நிறைவடைவதற்குள் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தற்போது புதிய மீன் இறங்குதளம் கட்டப்பட்டு வரும் கடற்கரையின் இருபுறங்களிலும் ஜெட்டி பாலம் உயரத்திற்கு கடல் மணல் நிரப்பி தளம் அமைக்கும் பணிகள் ஒரு பக்கம் நிறைவடைந்துள்ளது. மற்றொரு பகுதியில் தனியார் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கூடுதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி கட்டுமாண பணிகளை தூரிதபடுத்த வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆக்கிரமிப்பால் பணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Rameswaram port ,
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆனி...