×

களக்காடு அருகே 13 வயது சிறுமியை பெண் கேட்ட வாலிபர்

களக்காடு, மே 26: களக்காடு அருகே சிறுமியை திருமணம் செய்ய பெண் கேட்டு தர மறுத்ததால் தாயாரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள மாவடி எம்.எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெபசுதா (42). இவர் தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மாவடி இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராமர் மகன் பரமேஸ் (20) என்பவர் ஜெபசுதாவின் 13 வயது மகளை திருமணம் செய்ய பெண் கேட்டதாக தெரிகிறது. அதற்கு ஜெபசுதா மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. இதற்கிடையே சம்பவத்தன்று ஜெபசுதா தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பரமேஸ், ஜெபசுதாவை அவதூறாக பேசி, கம்பால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜெபசுதா நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பரமேஸை தேடி வருகின்றனர்.

The post களக்காடு அருகே 13 வயது சிறுமியை பெண் கேட்ட வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Jayakrishnan ,Mavadi MSS Nagar ,
× RELATED தனியார் நிறுவனத்தில் பிளாஸ்டிக் பைப்புகள் திருட்டு