×

நாகப்பட்டினத்தில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பம் வரவேற்பு

மயிலாடுதுறை, மே 26: 2023 ம் ஆண்டிற்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்திய அரசின் சார்பில் 2023ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இவ்விருதிற்கானவிண்ணப்பப்படிவம் https://awards.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரியிலேயே 31.5.2024 க்குள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வீர தீர சாகச செயல்புரிந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினத்தில் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Mayiladuthurai ,District Collector Mahabharathi ,Government of India ,
× RELATED தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: முன்னாள் நேர்முக உதவியாளர் கைது