×

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு

 

போடி, மே 26: போடி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதியினர் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி அருகே ரெங்கநாதபுரம் காந்தி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகன். விவசாயக் கூலி. இவரது வீட்டின் அருகே பைரவக் குமார் மற்றும் அவரது மனைவி கோமதி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி, வீட்டின் வெளியே நின்றிருந்த முருகனின் மனைவி செல்வியை, பைரவக் குமாரும் கோமதியும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து செல்வி அளித்த புகாரின் பேரில், போடி தாலூகா காவல்நிலைய போலீசார், பைரவக் குமார் மற்றும் கோமதி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Murugan ,First Street ,Gandhi Nagar, Renganathapuram ,Bodi, Theni district ,Dinakaran ,
× RELATED புகையிலை விற்ற 3 பேர் கைது