×

மஞ்சுவிரட்டில் 15 பேர் காயம்

 

திருப்புத்தூர், மே 26: திருப்பத்தூர் அருகே திருவார் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளிலிங்கம் திருக்கோயில் அபிஷேக ஆராதனை விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. கிராமத்தார்கள் கோயில்களில் வழிபாடு நடத்தி விட்டு, அங்கிருந்து மேளதாளத்துடன் புறப்பட்டு மஞ்சுவிரட்டு தொழு வந்தடைந்தனர். அங்கு ஊர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
தொடர்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 400க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

பிடிப்படாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும்இ மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும் கிராமத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 15 பேர் காயம்பட்டனர். இதில் திருப்புத்தூர் அருகே கூத்தக்குடியைச் சேர்ந்த முருகானந்தம் மகன் விஜய் (21), தஞ்சாவூர் சூசை மகன் சேசுராஜ் (45) ஆகிய 2 பேர் மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post மஞ்சுவிரட்டில் 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Manchuvirt ,Tiruputhur ,Manjuviratu ,Vallingam ,Tiruvar village ,Tirupathur ,Manchuvirat ,
× RELATED சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு