×

தேவகோட்டை அருகே வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

 

தேவகோட்டை, மே 26: தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் சாலையில் கவிழ்ந்ததில் 20 பேர் காயம் அடைந்தனர்.  தேவகோட்டை வட்டம் புளியால் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை செங்கல்பட்டில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்ற வேனை டிரைவர் வினோத்குமார் ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைபாஸில் இருந்த டிவைடரில் வேன் மோதி கவிழ்ந்தது.
இதில் பயணித்த 20 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது.

இச்சம்பவம் அறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் அனைவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலைகளில் மின்விளக்கு இல்லாததால். இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோல் சாலையின் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் இல்லாததாலும், அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

The post தேவகோட்டை அருகே வேன் கவிழ்ந்து 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Devakota ,Devakottai ,National Highway ,Vinodkumar ,Chengalpattu ,Rameswaram ,Devakottai Vattam Puliyal ,Dinakaran ,
× RELATED தேவகோட்டை அருகே கார் மோதி 6 ஆடுகள் பலி