×

மேலூர் அருகே ஓடும் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது

மேலூர், மே 26: மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் கவியரசன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தாரணி(20), நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலூரில் இருந்து சென்ற 108 ஆம்புலன்ஸ், தாரணியை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டது.

ஆனால் வழியிலேயே தாரணிக்கு பிரசவ வலி தீவிரமடைந்தது. இதனால் சாலையோரத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்சில் இருந்த செவிலியர் விமல், ஆம்புலன்ஸ் டிரைவர் விஜயகுமார் பிரசவத்திற்கான உதவிகளை செய்தனர். பின்னர் தாயும் சேயும் நலமாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்கள் மருத்துவ கவனிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்சில் பிரசவித்த தாரணிக்கு, இது 2வது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மேலூர் அருகே ஓடும் 108 ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது appeared first on Dinakaran.

Tags : Melur ,Kaviarasan ,Ettimangalam ,Kottampatti ,Dharani ,Dinakaran ,
× RELATED கோடையிலும் தண்ணீர் நிரம்பிய கிணறு