×

கார் விபத்தால் தகராறு: போலீசார் வழக்கு

 

வேடசந்தூர், மே 25: அய்யலூர் அருகே உள்ள பழைய சித்துவார்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (35). திண்டுக்கல் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி அய்யலூரில் இருந்து எரியோடு செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அய்யலூர் எஸ்.கே. நகரில் சாலையோரம் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த பாலகுரு(45), பழைய சித்துவார்பட்டியை சேர்ந்த முருகன்(48) ஆகியோர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். கொம்பேறிபட்டி அருகே கார் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் பாலகுரு, முருகன் மற்றும் விஜயகுமார் காயமடைந்தனர். இது தொடர்பாக பாலகுரு மற்றும் முருகன் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் மோதியதால் பாலகுரு தரப்பினர் தன்னை தாக்கியதாக விஜயகுமாரும் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பாலகுரு மற்றும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் விபத்தால் தகராறு: போலீசார் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Vijayakumar ,Old Chidwarpatti ,Ayyalur ,Dindigul Court ,Eriodu ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் வேடசந்தூர் அருகே...