மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்: 10 பேர் காயம்

 

மேலூர், மே 24: மேலூர் அருகே வைகாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில், சீறி பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களில் 10 பேர் காயமடைந்தனர். மேலூர் அருகே கச்சிராயன்பட்டி, வீரசூடாமணிபட்டி, சுந்தரராஜபுரம் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த நெவுலிநாதன் ஐந்து முழி அழகியத்தாள் சுவாமி கோயிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு களத்தில் இறங்கி தங்களை அடக்க வந்த இளைஞர்கள் முன்பாக சீறிப்பாய்ந்தன. இதில் சில காளைகள் இளைஞர்களிடம் சிக்கின. ஏராளமான காளைகள் பிடிபடாமல் சென்றன. மேலும் காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக கிராம பெரியவர்கள் சார்பில் மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட காளைகளுக்கு வேஷ்டி, துண்டு அளித்து மரியாதை செய்யப்பட்டது.

The post மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்: 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: