×

இளையான்குடி அரசடியில் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.2.40 லட்சம் ஒதுக்கீடு

இளையான்குடி, மே 23: இளையான்குடி ஒன்றியம் விரையாதகண்டன் ஊராட்சிக்குட்பட்ட அரசடியில் தெருக்களில் சாலை வசதி, பாதுகாப்பான குடிநீர் இல்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழாய் அமைப்பதற்காக தெருவின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டது. அதன்பிறகு சாலை அமைக்கவே இல்லை. இதனால் சைக்கிள், டூவீலர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் நடந்து செல்லும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால் இடறி விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து கடந்த மே 17ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளிவந்தது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் அரசடியில் ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் அரசடியில் ஒன்றிய பொறியாளர்கள், அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் அரசடியில் ரூ.2.40 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்க கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், உரிய நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கும் அரசடி கிராமமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

The post இளையான்குடி அரசடியில் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.2.40 லட்சம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Ilayankudi Government ,Ilaiyankudi ,Virayadakandan Panchayat ,Ilaiyankudi Union ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி