×

கோவில்பட்டியில் பரபரப்பு மது குடிக்க பணம் கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்

கோவில்பட்டி, மே 22: கோவில்பட்டியில் மது குடிக்க பணம் கேட்டவரை சரமாரியாக தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி தாமஸ் நகர் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா (41). கூலி தொழிலாளியான இவர், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (29), ரவி மகன் ரமேஷ் (25), மகாலிங்கம் மகன் கருப்பசாமி (24), பாலமுருகன் மகன் கார்த்தி (23), மறவர் காலனியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் பாண்டி (26) ஆகியோரிடம் மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்றும் மது குடிக்க ராஜா பணம் கேட்கவே, அவர்கள் பணத்திற்கு பதிலாக மதுபாட்டில் தருகிறோம் என்று கூறி வள்ளுவர் நகரில் உள்ள ரமேஷ் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. பின்னர் அங்கு வைத்து சரவணன் உள்பட 5 பேரும் சேர்ந்து ராஜாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். காயமடைந்த அவர், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின்பேரில் சரவணன் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கோவில்பட்டியில் பரபரப்பு மது குடிக்க பணம் கேட்ட தொழிலாளி மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Kovilpatty Kovilpatty ,Kovilpatty ,RAJA ,KOVILPATTI ,THOMAS ,NAGAR ,METUTHERU ,Aurumugam ,Kovilpatty Valluvar ,Govilpatty ,
× RELATED கோவில்பட்டி அருகே கார் மோதி முதியவர் பலி