×

கோவில்பட்டி அருகே கார் மோதி முதியவர் பலி

 

துவரங்குறிச்சி, மே 21: கோவில்பட்டி அருகே கார் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மீனவேலி வெள்ளைய கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி (65). இவர் துவரங்குறிச்சி அடுத்த கோவில்பட்டி மணப்பாறை சாலையில் ரெட்டியபட்டி அருகே டூவீலரில் நேற்று சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த பெரியசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோவில்பட்டி அருகே கார் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kovilpatty ,Thurangurichi ,Gowilpatti ,Peryasami ,Meenaveli White Countryside, Pudukkottai District ,Duweiler ,Retiapati ,Kovilpatty Manapara Road ,Thuvarangurichi ,Kovilpatti ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் பரபரப்பு மது குடிக்க பணம் கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்