×

பைக்கில் சென்ற இளைஞர் தடுப்பு கட்டையில் மோதி பலி

 

வானூர், மே 20: வானூர் தாலுகா ஆத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (19). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் பாலகுமார் (24). தனியார் கம்பெனி ஊழியர். இருவரும் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரிக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். மொரட்டாண்டி டோல்கேட்டை தாண்டி வந்தபோது தனியார் ஓட்டல் எதிரே சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டை யில் எதிர்பாராதவிதமாக மோதி படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்தபோது ஆகாஷ் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த பாலமுருகன் முதல் உதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக்கில் சென்ற இளைஞர் தடுப்பு கட்டையில் மோதி பலி appeared first on Dinakaran.

Tags : Vanur ,Akash ,Atrampattu ,Vanur taluk ,Balakumar ,Puducherry ,
× RELATED வானூர் முன்னாள் எம்எல்ஏ மறைவு முதல்வர் இரங்கல்