×

ஆர்.எஸ்.புரத்தில் மசாஜ் சென்டரில் விபசாரம்

 

கோவை, மே 18: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். கோவை சுக்கிரவார்பேட்டை ஆர்ஜி தெருவில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு பாலியல் தொழில் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அதில், மசாஜ் என்ற பெயரில் அங்கு இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மசாஜ் சென்டர் நிர்வாகி சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (31) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட புதுச்சேரி, திருச்சி, ஈரோட்டை சேர்ந்த 4 இளம்பெண்களை மீட்ட போலீசார் அவர்களை கோவையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

The post ஆர்.எஸ்.புரத்தில் மசாஜ் சென்டரில் விபசாரம் appeared first on Dinakaran.

Tags : RS Puram ,Coimbatore ,RS Puram, Coimbatore ,RG Street, ,Sukrawarpet, Coimbatore ,RSPuram police ,RSPuram ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேறாதவர்களுக்கு ஆறுதல்