கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புக்குழு 4 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு

சென்னை:தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வழிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் வீதம் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாநில பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நெல்லையில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், குமரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

The post கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புக்குழு 4 மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: