தக்கலை: கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது. தற்போது கோடை விடுமறை காலமாக உள்ளதால் சுற்றுலா தலங்ககளில் கூட்டம் அலை மோதுகிறது. கோடை விடுமுறை முடிவுக்கு வர குறைந்த நாட்களே இருப்பதால் சுற்லுா தலங்கள் அனைத்தும் களைகட்டியுள்ளன. கோடை காலத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா வாசிகள் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் சென்று தங்களது விடுமுறை காலத்தை செலவிட்டு வருகின்றனர்.
குளிர்நிலவும் சுற்றுலா தலங்கள் மட்டுமல்லாமல் அனைத்து சுற்றுலா தலங்களும் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வகையில் 400 ஆண்டுகளை கடந்த பத்மநாபபுரம் அரண்மனையிலும் சுற்றுலா பயணிகள் கட்டுக்கடங்காமல் வந்து செல்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டதால் அரண்மனையின் அனைத்து பகுதியும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக காணப்பட்டது.
இதன் காரணமாக பயணிகள் அரண்மனையில் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு அடுத்த பகுதிக்கு கடந்து செல்வதற்கு கால தாமதம் ஏற்பட்டது. ெகாளுத்தும் வெயிலில் அரண்மனை கட்டிடங்கள் குளிர்ச்சியாக இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு வெயில் ஒரு பொருட்டாக தெரியவில்லை. பயணிகள் வருகையால் அரண்மனை பட்டுமன்றி பத்மநாபபுரம் ரத வீதிகள் முழுவதும் வாகனங்களால் திணறியது. அரண்மனையினை காண நேற்று கேரள சுற்றுலா பயணிகளே அதிகம் வந்திருந்தனர். அரண்மனை முகப்பில் இளநீர், நுங்கு, குளிர்பான வியாபாரமும் அமோகமாக இருந்தது.
The post கோடை விடுமுறை எதிரொலி பத்மநாபபுரம் அரண்மனையில் குவியும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.