கொடைக்கானலில் குறைந்து வரும் பிளம்ஸ் பழங்களின் விளைச்சல்

கொடைக்கானல் : கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்களின் விளைச்சலை ஊக்குவிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொடைக்கானல் மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள மலை கிராமங்களான பள்ளங்கி, வில்பட்டி, அட்டுவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன் விவசாயிகள் பிளம்ஸ் பழம் விவசாயம் அதிகம் செய்து வந்தனர். கொடைக்கானலில் விளையும் பிளம்ஸ் பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும்.

இதுபோல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும், இதனை விரும்பி வாங்கி செல்வர். தற்போது இயற்கை மாற்றம் மற்றும் விவசாய நிலங்கள் அழிந்து வரும் சூழலில் பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் முற்றிலுமாக பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் பிளம்ஸ் விவசாயம் முற்றிலும் அழிந்து வரும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் பிளம்ஸ் மரங்கள் காய்ந்து போய் உள்ளது. மேலும் ஏப்ரல், மே மாதங்களில் பிளம்ஸ் பழங்களின் அறுவடை நடைபெறும் சூழலில் பிளம்ஸ் விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பிளம்ஸ் விவசாயத்தை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.கொடைக்கானலில் தற்போது குறைவாக விளைந்துள்ள பிளம்ஸ் பழங்கள் கிலோ ரூ.300 முதல் 400 வரை விற்கப்படுகின்றது. ஆனால் விற்பதற்கு பிளம்ஸ் பழங்கள் தான் போதிய அளவு இல்லை.

The post கொடைக்கானலில் குறைந்து வரும் பிளம்ஸ் பழங்களின் விளைச்சல் appeared first on Dinakaran.

Related Stories: