×

கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை

கர்நாடகா: கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் வலியில் துடி துடித்த வீடியோ வெளியாகி அதிர்வலையை கிளப்பிய நிலையில் திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்களை உடனடியாக உட்கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கர்நாடகாவின் தாவணக்கரை பகுதியில் அண்மையில் பொருட்காட்சியின் போது சிறுவன் ஒருவன் திரவ நைட்ரஜன் கலந்த ஸ்மோக் பிஸ்கட்டை பருகி இருக்கிறார்.

அதனை சாப்பிட்டதும் மூச்சு விடமுடியாமல் வயிற்றுவலியால் துடித்த சிறுவனை பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் திரவ நைட்ரஜனை புகை வடிவில் உட்கொள்வது எந்த வயதினருக்கும் ஆபத்து தான் என்கின்றனர் மருத்துவர்கள். ஆய்வு கூடங்களில் பொருட்களை குளிர்ச்சியான சூழலில் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இந்த திரவ நைட்ரஜன் அரை வெப்ப நிலையில் வாயுவாக மாறும் தன்மை கொண்டது.

இவற்றை கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஸ்மோக்கிங் பிஸ்கட், ஸ்மோக்கிங் பீடா போன்ற பெயர்களில் சாப்பிடும் பொருட்களாக விற்பனை செய்கின்றனர். திரவ வடிவிலான நைட்ரஜனை நேரடியாக உட்கொள்வது ஆபத்தானது என்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண். தோளில் பட்டாலே எறியும் தன்மை கொண்ட வேதி பொருளை வாய்வழியாக உட்கொள்ளும் போது உணவு குழாயில் ஓட்டையை உருவாக்கி விடும் என்றும் மூக்கால் நுகர்வதும் ஆபத்தானது எனவும் அவர் எச்சரிக்கிறார்.

திரவ நிலையில் கிட்டத்தட்ட மைனஸ் 196 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை இருக்கும் திரவ நைட்ரஜனை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பயன்படுத்துவது அவசியம் இந்த திரவம் ஊற்றப்பட்ட உணவுகளை சாப்பிட்ட பின் வயிறு வலி வயிறு உபசம், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சிறுவர்கள் முன்னிலையில் கேலிகாக இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள் திரவ நைட்ரஜன் பயன்பாட்டிற்கான நெறிமுறைகள் கண்டிப்புடன் பின் பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர்.

 

The post கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Scarf ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...