இதில் ஆண் வாக்காளர்கள் 23 லட்சத்து 98 ஆயிரத்து 711 பேர். பெண்கள் 24 லட்சத்து 69 ஆயிரத்து 345 பேர். மூன்றாம் பாலினத்தவர் 1462 பேர் அடங்குவர். ஆனால், 3 தொகுதிகளிலும் சேர்த்து 55.94 சதவீதம் வாக்குகள் மட்டும் பதிவாகியுள்ளது. அதாவது, 27 லட்சத்து 24 ஆயிரத்து 7 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 21 லட்சத்து 45 ஆயிரத்து 511 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்தவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அதாவது, 13 லட்சத்து 74 ஆயிரத்து 83 பேர் வாக்களித்துள்ளனர். பெண்கள் 13 லட்சத்து 49 ஆயிரத்து 545 பேர் வாக்களித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 379 பேர் வாக்களித்துள்ளனர். வடசென்னையை பொறுத்தவரை திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர், ராயபுரம் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.
அதில்,
* திருவொற்றியூர் தொகுதியில் மொத்தம் 276768 வாக்காளர்கள். அதில் ஆண் வாக்காளர்கள் 13,62,12 பேரும், பெண் வாக்காளர்கள் 140412 பேரும், மற்றவர்கள் 144 பேரும் அடங்குவர். இதில் ஆண்கள் 87468 பேரும், பெண்கள் 86474 பேரும், மற்றவர்கள் 40 பேரும் என மொத்தம் 173982 பேர் வாக்களித்துள்ளனர்.
* ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 243068 வாக்காளர்கள். இதில் ஆண்கள் 117105 பேரும், பெண்கள் 125849 பேரும், மற்றவர்கள் 114 பேரும் உள்ளனர். இதில், ஆண்கள் 79509 பேரும், பெண்கள் 82847 பேரும், மற்றவர்கள் 31 பேரும் என மொத்தம் 162387 பேர் வாக்களித்துள்ளனர்.
* பெரம்பூர் தொகுதில் மொத்தம் 284022 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 139583 பேரும், பெண்கள் 144358 பேரும், மற்றவர்கள் 81 பேரும் உள்ளனர். இதில், 86862 ஆண்களும், 84763 பெண்களும், 35 மற்றவர்களும் வாக்களித்துள்ளனர்.
* கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 282903 வாக்காளர்கள். இதில், 138075 ஆண்களும், 144756 பெண்களும், 72 மற்றவர்களும் உள்ளனர். இதில் 80864 ஆண்களும், 78952 பெண்களும், 8 மற்றவர்களும் என மொத்தம் 159824 பேர் வாக்களித்துள்ளனர்.
* திரு.வி.க நகர் தொகுதியில் மொத்தம் 216805 வாக்காளர்கள். இதில் 105278 ஆண்களும், 111465 பெண்களும், 62 மற்றவர்களும் உள்ளனர். இதில், ஆண்கள் 61341 பேரும், பெண்கள் 60291 பேரும், 19 மற்றவர்கள் என மொத்தம் 121651 பேரும் வாக்களித்துள்ளனர்.
* ராயபுரம் தொகுதியில் 192658 வாக்காளர்கள். இதில் 94142 ஆண்களும், 98446 பெண்களும், 70 மற்றவர்களும் உள்ளனர். இதில் 55290 ஆண்களும், 54557 பெண்களும், 19 மற்றவர்கள் என மொத்தம் 109863 பேரும் வாக்களித்துள்ளனர்.
* தென்சென்னையில் மொத்தம் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், விருகம்பாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.
* மயிலாப்பூர் தொகுதியில் மொத்தம் 263875 வாக்காளர்கள். இதில் ஆண்கள் 127876 பேரும், பெண்கள் 135954 பேரும், 45 மற்றவர்கள் உள்ளனர். 69506 ஆண்களும், 69409 பெண்களும், மற்றவர்கள் 5 என மொத்தம் 138920 பேர் வாக்களித்துள்ளனர்.
* சைதாப்பேட்டை தொகுதியில் மொத்தம் 269334 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 132211 ஆண்களும், 137039 பெண்களும், 84 மற்றவர்களும் அடங்குவர். இதில் 71325 பெண்களும், 72371 ஆண்களும், 30 மற்றவர்கள் என மொத்தம் 143726 பேர் வாக்களித்துள்ளனர்.
* தி.நகர் தொகுதியில் மொத்தம் 231924 வாக்காளர்கள். இதில், 114363 ஆண்களும், 117514 பெண்களும் மற்றவர்கள் 47 பேரும் உள்ளனர். இதில் 62685 ஆண்களும், 61501 பெண்களும், மற்றவர்கள் 12 என மொத்தம் 124198 பேர் வாக்களித்துள்ளனர்.
* விருகம்பாக்கம் தொகுதியில் 280105 வாக்காளர்கள். இதில் 139213 ஆண்களும், 140804 பெண்களும், 88 மற்றவர்களும் உள்ளனர். இதில் 76278 ஆண்களும், 74980 பெண்களும், 9 மற்றவர்களும் என மொத்தம் 151267 பேர் வாக்களித்துள்ளனர்.
* வேளச்சேரி தொகுதியில் ஆண்கள் 153150, பெண்கள் 157058, மற்றவர்கள் 81 என மொத்தம் 310289 வாக்காளர்கள். இதில் ஆண்கள் 84266, பெண்கள் 84212, மற்றவர்கள் 5 என மொத்தம் 168483 பேர் வாக்களித்துள்ளனர்.
* சோழிங்கநல்லூர் தொகுதியில் 334038 ஆண்களும், 333449 பெண்களும், 119 மற்றவர்கள் என மொத்தம் 667606 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 186983 ஆண்களும், 182415 பெண்களும், மற்றவர்கள் 34 பேரும் என மொத்தம் 369432 பேர் வாக்களித்துள்ளனர்.
* மத்திய சென்னையில், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.
* வில்லிவாக்கம் தொகுதியில் 117952 ஆண்களும், 122492 பெண்களும், 63 மற்றவர்கள் என மொத்தம் 240507 வாக்காளர்கள். இதில் 65604 ஆண்களும், 63931 பெண்களும், 7 மற்றவர்கள் என மொத்தம் 129542 பேர் வாக்களித்துள்ளனர்.
* எழும்பூர் தொகுதியில் 94753 ஆண்கள், 96520 பெண்கள், 63 மற்றவர்கள் என மொத்தம் 191336 வாக்காளர்கள். இதில் ஆண்கள் 55494 பேரும், 53419 பெண்கள், 17 மற்றவர்கள் என மொத்தம் 108930 பேர் வாக்களித்துள்ளனர்.
* துறைமுகம் தொகுதியில் 90529 ஆண்கள், 83960 பெண்கள், 64 மற்றவர்கள் என மொத்தம் 191336 வாக்காளர்கள். இதில், 49419 ஆண்கள், 43389 பெண்கள், 19 மற்றவர்கள் என மொத்தம் 92827 பேர் வாக்களித்துள்ளனர்.
* சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 114845 ஆண்கள், 119018 பெண்கள், மற்றவர்கள் 59 என மொத்தம் 233912 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 64289 ஆண்கள், 62277 பெண்கள், 30 மற்றவர்கள் என மொத்தம் 126596 பேர் வாக்களித்துள்ளனர்.
* ஆயிரம் விளக்கு தொகுதியில் 114936 ஆண்கள், 120266 பெண்கள், 106 மற்றவர்கள் என மொத்தம் 235308 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 61281 ஆண்கள், 61430 பெண்கள், மற்றவர்கள் 32 என மொத்தம் 122743 பேர் வாக்களித்துள்ளனர்.
* அண்ணாநகர் தொகுதியில் 134460 ஆண்கள், 139985 பெண்கள், 100 மற்றவர்கள் என மொத்தம் 274545 வாக்காளர்கள். இதில், 74573 ஆண்கள், 73373 பெண்கள், மற்றவர்கள் 30 என மொத்தம் 147976 பேர் வாக்களித்துள்ளனர்.
* மத்தியசென்னை
667465 ஆண் வாக்காளர்கள்
682241 பெண் வாக்காளர்கள்
455 மற்றவர்கள்
மொத்தம் 1350161 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 370660 ஆண்கள், 357819 பெண்கள், மற்றவர்கள் 135 பேர் என மொத்தம் 728614 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 53.96% பேர் வாக்களித்துள்ளனர்.
* தென்சென்னை
1000851 ஆண் வாக்காளர்கள்
1021818 பெண் வாக்காளர்கள்
464 மற்றவர்கள்
மொத்தம் 2023133
வாக்காளர்கள் உள்ளனர். இதில் 552089 ஆண் வாக்காளர்கள், 543842 பெண் வாக்காளர்கள், 95 மற்றவர்கள் என மொத்தம் 1096026 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 54.17% பேர் வாக்களித்துள்ளனர்.
* வடசென்னை
730395 ஆண் வாக்காளர்கள்
765286 பெண் வாக்காளர்கள்
543 மற்றவர்கள்
மொத்தம் 1496224 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 451334 ஆண்கள்,447884 பெண்கள்,149 மற்றவர்கள் என 899367 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது சுமார் 60.11% பேர் வாக்களித்துள்ளனர்.
The post சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் 21.45 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை: பெண்களைவிட ஆண்களே அதிகம் வாக்களிப்பு appeared first on Dinakaran.