×

நீலகிரி அதிமுக வேட்பாளர் சேலத்தில் வாக்களித்தார்

சேலம், ஏப்.20: சேலம் தாதகாப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் வாக்களித்தார். அவரது தந்தையும், முன்னாள் சபாநாயகருமான தனபாலும், அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர், இருவரும் நீலகிரி புறப்பட்டு சென்றனர். மேலும், சேலம் குகை அம்பலவாணசுவாமி கோயில் தெருவில் உள்ள வாக்கு மையத்தில், தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியம் வாக்களித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலத்தில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள் என அத்தியாவசியமான கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது.

The post நீலகிரி அதிமுக வேட்பாளர் சேலத்தில் வாக்களித்தார் appeared first on Dinakaran.

Tags : Nilgiri AIADMK ,Salem ,AIADMK ,Lokesh Tamilselvan ,Salem Dadagapatti Corporation Middle School ,Speaker ,Dhanapal ,Nilgiris ,Salem Cave ,Ambalavanaswamy… ,
× RELATED சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் 70வது...