- ஏரி பூங்கா
- சேலம் மாவட்ட பள்ளிபார்
- சேலம்
- சேலம் ஸ்கூல்பார்
- ஷோல்பட்டி ஏரி
- பள்ளிபட்டி ஏரி
- சேலம் நகராட்சி
- சேலம் மாவட்ட பள்ளிப்பாட்
- தின மலர்
சேலம்: சேலம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ ஏற்பட்டது. பள்ளப்பட்டி ஏரியை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகரின் மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அருகே பள்ளப்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.19 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களை கவரும் வகையில் புரணமைக்கப்பட்டது.
ஏரியின் கரைகள் திடப்படுத்தப்பட்டு, ஏரியில் படகு சவாரியும், குழந்தைகளை கவரும் வகையில் பூங்கா மற்றும் மலைகள் போன்ற வடிவமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு புரணமைக்கப்பட்ட ஏரியின் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பூங்காவிற்கு பொதுமக்கள் வழக்கமாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மதியம் 2 மணியளவில் மலைகள் போன்று வடிவமைக்கப்பட்ட பகுதியில் இருந்து புகை வெளியேறியது.
இதையடுத்து தீ மளமளவென மலை வடிவமைப்பு முழுவதும் பரவியதால் அப்பகுதி புகை மண்டலாமாக காட்சியளித்தது. இதனை கண்ட அப்பகுதியிலிருந்த மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.