×

திருப்பூரில் 72.02 சதவீதம் வாக்குப்பதிவு

 

திருப்பூர், ஏப்.20: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. 6 மணிக்கு மேல் வந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. அதற்கு முன்பு வந்தவர்களுக்கு டோக்கன்கள் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான எல்ஆர்ஜி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், மாவட்டத்தில் பதிவான வாக்குகள் நிலவரம் வருமாறு: காலை 9 மணி நிலவரப்படி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 13.41 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதிகபட்சமாக பவானி சட்டப்பேரவைத் தொகுதியில் 14.74 சதவீதமும், குறைந்தபட்சமாக திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 11.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. காலை 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பவானி தொகுதியானது 31.82 சதவீதமும், குறைந்தபட்சமாக திருப்பூர் வடக்கு தொகுதி 23.14 சதவீதமே நீடித்தன.

மதியம் 1 மணி மற்றும் 3 மணி நிலவரப்படி தொகுதியில் சராசரி 53.71 சதவீதமாக இருந்தது. வாக்குப்பதிவு நிறைவடையும் ஒரு மணி நேரம் முன்பாக பவானி 71.88 சதவீதமும், திருப்பூர் தெற்கு 54.42 சதவீதமும், திருப்பூர் வடக்கு 54.66 சதவீதமும், அந்தியூர் 70.21 சதவீதமும், கோபிசெட்டிபாளையம் 73.20 சதவீதமும் மற்றும் பெருந்துறை 73.30 சதவீதமும் பதிவாகின. மாலை 5 மணி நிலவரப்படி தொகுதியின் சராசரியாக 66.28 சதவீதம் பதிவாகின. இறுதியாக மாலை 6 மணி நிலவரப்படி 72.02 சதவீதம் தொகுதி வாரியாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

The post திருப்பூரில் 72.02 சதவீதம் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்