மதுரை கோட்டத்தில் ஒரே நாளில் ரூ.55.84 கோடிக்கு மது விற்பனை

மதுரை, ஏப்.18: தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக மூன்று நாள் மற்றும் ஒரு நாள் சேர்த்து மொத்தம் நான்கு நாட்கள் மதுபான கடைகள் அடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், எப் எல் 2 முதல் எப் எல் 11 பார்கள் (எப்எல்-6 நீங்கலாக) அனைத்தும் நேற்று காலை 10 மணி முதல் 19.04.2024 (வாக்குப்பதிவு நாள்) இரவு 12 மணி வரை மற்றும் 21.4.2024(மகாவீரர் ஜெயந்தி) ஆகிய தினங்கள் மூடப்படும் என கலெக்டர் சங்கீதா அறிவித்திருந்தார். தொடர் விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் போட்டி போட்டுக் கொண்டு மது பாட்டில்களை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுரை கோட்டத்தில் ரூ.55 கோடியே 84 லட்சத்திற்கு மது பாட்டில்கள் விற்பனை நடந்துள்ளது என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

The post மதுரை கோட்டத்தில் ஒரே நாளில் ரூ.55.84 கோடிக்கு மது விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: