×

அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர் திமுகவில் இணைந்தனர் ஈரோட்டின் வளர்ச்சிக்காகவே எனது பொதுவாழ்வு இருக்கும்

பல்லடம். ஏப்.18: பல்லடம் அருகே அமைச்சர் முன்னிலையில் இணைந்த பாஜவினரை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் திமுக வண்ண சால்வை அணிவித்து வரவேற்றார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் பல்லடம் பாஜ வடக்கு ஒன்றிய செயலாளர் அறிவொளி நகர் கவிதா என்பவரது தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பாஜவினர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். அவர்களை திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் திமுக வண்ண சால்வை அணிவித்து வரவேற்றார்.

அப்போது, கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.சோமசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் எஸ்.குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் அசோகன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் ஆறுமுத்தாம்பாளையம் சின்னப்பன், பூமலூர் தியாகராஜன், பூமலூர் சீனிவாசன், உள்பட ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.

The post அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர் திமுகவில் இணைந்தனர் ஈரோட்டின் வளர்ச்சிக்காகவே எனது பொதுவாழ்வு இருக்கும் appeared first on Dinakaran.

Tags : BJP ,DMK ,Erode ,Tirupur North District ,Tirupur South Constituency Assembly ,Selvaraj ,Palladam ,Prasanepet ,Palladam, ,Tirupur district ,Dinakaran ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...