×

மனைவியுடன் தகாத உறவு வாலிபருக்கு கத்திவெட்டு

வடலூர், ஏப். 18: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே கல்லையங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (28), கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடத்திற்கு முன் சந்தியா (24) என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் அசோக்குமார் (27). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் பொக்லைன் ஆபரேட்டராக இருந்து வருகிறார். இவர் தனது நண்பரான ஜெயராஜ் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது ஜெயராஜின் மனைவி சந்தியாவிற்கும், இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயராஜ் வெளியே சென்றதும் அவரது வீட்டுக்கு அசோக்குமார் சென்று சந்தியாவுடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று வீட்டிற்கு வந்த ஜெயராஜ் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அசோக்குமாரிடம் கேட்டபோது, அவர் ஜெயராஜை அசிங்கமாக திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயராஜ், அசோக்குமாரை இரும்பு கம்பியால் தலையில் அடித்தும், அருகில் இருந்த கத்தியை எடுத்து தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அசோக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அசோக்குமாரின் சித்தப்பா கோதண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து ஜெயராஜை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மனைவியுடன் தகாத உறவு வாலிபருக்கு கத்திவெட்டு appeared first on Dinakaran.

Tags : Vadalore ,Jayaraj ,Kallayanguppam ,Kullanjavadi ,Cuddalore district ,Sandhya ,
× RELATED ரூ.25 லட்சம் மோசடியில் கைதான எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்