×

ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்

அட்சய லக்னமும் பாவகங்களும்

ஜென்ம லக்னத்தில் இருந்து ALP லக்னம் எங்கு சென்று கொண்டிருக்கிறது, அந்த பாவகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் கேள்விகளும் இருக்கும்.

ALP லக்னம் ஒன்றாம் பாவத்தில், 1 வயது முதல் 10 வயது வரைக்கும், ஜாதகர் சம்பந்தப்பட்ட உடல்நிலை சார்ந்த நிகழ்வுகளும் கேள்விகளும் இருக்கும்.

ALP லக்னம் இரண்டாம் பாவகத்தில், 11 வயது முதல் 20 வயது வரைக்கும், ஜாதகர் படிப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் கேள்விகளும் இருக்கும்.

ALP லக்னம் மூன்றாம் பாவகத்தில், 21 வயது முதல் 30 வயது வரைக்கும், ஜாதகர் போட்டி தேர்வு, திருமணம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், 3-ஆம் பாவகம் செயல்படும்போது, ஜாதகருடைய வீரியம் உடல் திறனில் தன்னைத்தானே இயக்கும் திறமை உள்ளவராகிறார். வேலை திருமணம் போன்றவற்றில் சுயமாக செயல்படக்கூடிய தகுதியை அடைகிறார்.

ALP லக்னம் நாலாம் பாவகத்தில், 31 வயது முதல் 40 வயது வரைக்கும் ஜாதகர், வண்டி வாகனம், சொத்து, வேலை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் கேள்விகளும் இருக்கும்.

ALP லக்னம் ஐந்தாம் பாவகத்தில், 41 வயது முதல் 50 வயது வரைக்கும் ஜாதகர், குழந்தைகள், வேலை மாற்றம், பூர்வீகம், குலதெய்வம், பூர்வ புண்ணியம் போன்ற நிகழ்வுகளும் கேள்விகளும் இருக்கும்.

ALP லக்னம் ஆறாம் பாவகத்தில், 51 வயது முதல் 60 வயது வரைக்கும் ஜாதகர், நோய், கடன், ருண ரோகசத்துரு, வம்பு வழக்கு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளும் கேள்விகளும் இருக்கும்.

ALP லக்னம் ஏழாம் பாவகத்தில், 61 வயது முதல் 70 வயது வரைக்கும் ஜாதகர், குழந்தைகளுடைய திருமணம், அவர்களுடைய வாழ்க்கை பற்றிய கேள்விகள் இருக்கும்.

ALP லக்னம் எட்டாம் பாவகத்தில், 71 வயது முதல் 80 வயது வரைக்கும் ஜாதகர், தீராத நோய் கண்டம், தீராத பிரச்னைகள், ஆயுள் பற்றிய கேள்விகள் இருக்கும்.

ALP லக்னம் ஒன்பதாம் பாவகத்தில், 81 வயது முதல் 90 வயது வரைக்கும் ஜாதகர், பாக்கியம், குழந்தைகள் நோய் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருக்கும்.

ALP லக்னம் பத்தாம் பாவகத்தில், 91 வயது முதல் 100 வயது வரைக்கும் ஜாதகர், ஆயுள் கர்மா, உடல்நிலை பற்றிய கேள்விகள் இருக்கும்.

ALP லக்னம் 11 பாகத்தில், 101 வயது முதல் 110 வயது வரை ஜாதகருக்கு மன மகிழ்ச்சி, குழந்தைகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருக்கும்.

ALP லக்னம் 12 பாவகத்தில், 111 வயது முதல் 120 வயது வரைக்கும் மோட்சம் சம்பந்தப்பட்ட கேள்விகள் இருக்கும்.
(வளரும்)

தொகுப்பு: கிரி ஜானகிராமன்

அட்சய லக்னத்தின் மகிமைகள்

விதி என்றால் நமது லக்னத்தையும், மதி என்றால் நமது ராசியையும் இணைந்து அட்சய லக்னம், அட்சய ராசி என இரு பிரிவுகளில் உடலும் மனமும் சேர்ந்து வளர்கிறது. இரு தண்டவாளங்கள் ஒத்து இருந்தால், சம அளவில் அதன்மேல் பயணம் செய்யும் புகை வண்டி சரியான பாதையில் சரியான நேரத்தில் இலக்கை அடையும் என்பது விதி. அதேபோலத்தான் இந்த அட்சய லக்னமும், ராசியும் இரு தண்டவாளங்கள் இரண்டும் சம அளவில் அல்லது ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கினால் மட்டுமே, வாழ்க்கை எனும் வண்டி மிகப் பெரிய வெற்றி பெறும். இந்த ஜோதிடக் கலையில் விதி மதி இரண்டும் சேர்ந்து இயங்கும் போதுதான் ஆலயங்களுக்கோ நல்ல ஜோதிடர்களிடமோ அல்லது குருமார்களிடமோ சென்று வழி கேட்டு ஒருவர் தனக்குத்தானே வாழ்க்கையை சிற்பியாய் செதுக்கிக் கொள்வார்.

The post ALP ஜோதிடம் ஓர் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Akshaya ,Lagna ,Bhavakas ,ALP ,Janma Lagna ,Bhavaka ,
× RELATED அட்சய திரிதியை வரும் 10ம் தேதி...