தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய உயர் அதிகாரி .. பதவி விலகிய போலீஸ் கான்ஸ்டபிள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை!!

ஹைதராபாத் : சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்திய நிலையில் போலீஸ் வேலையை ராஜினாமா செய்த தெலுங்கு போலீஸ் கான்ஸ்டபிள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த உதய் கிருஷ்ணா ரெட்டி தேசிய அளவில் 780வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் உதய் கிருஷ்ணா ரெட்டியின் பின்னணி அனைவரையும் ஈர்த்துள்ளது. உதய் கிருஷ்ணா ரெட்டி ஒரு எக்ஸ் போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

இவர் 2013 முதல் 2018 வரை காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், உதய் கிருஷ்ணா ரெட்டியை தனிப்பட்ட வெறுப்பு காரணமாக 60 ஊழியர்கள் முன்னிலையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்தி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த உதய் கிருஷ்ணா ரெட்டி அன்றைய தினமே போலீஸ் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய நிலையில், தீவிர பயிற்சி மேற்கொண்டு தற்போது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார். உதய் கிருஷ்ணா ரெட்டி இந்திய வருவாய் சேவைக்கு நியமிக்கப்படலாம், ஆனால் அவர் இந்திய நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து தேர்வு எழுதப்போவதாக தெரிவித்துள்ளார்.

The post தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய உயர் அதிகாரி .. பதவி விலகிய போலீஸ் கான்ஸ்டபிள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை!! appeared first on Dinakaran.

Related Stories: