×

ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை: அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் வணிக நிறுவனங்கள் வரும் 19ந் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வரும் 19ந் தேதி நடைபெறவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் பொருட்டு திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துகடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135பி-ன் கீழ் அன்றையதினம் சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கப்படவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை தெரிவிக்க தொழிலாளர் உதவிஆணையருக்கு (அமலாக்கம்) 9442912527 என்ற அலைப்பேசி எண்ணிலும், திருவாரூர் முதல் மற்றும் இரண்டாம் வட்ட தொழிலாளர் உதவிஆய்வாளரை 9566972809 என்ற அலைப்பேசி எண்ணிலும், மன்னார்குடி முதல் வட்டம் மற்றும் திருத்துறைப்பூண்டி தொழிலாளர் உதவிஆய்வாளரை 7418784731 என்ற அலைப்பேசி எண்ணிலும், மன்னார்குடி இரண்டாம் வட்ட தொழிலாளர் உதவிஆய்வாளரை 6382644698 என்ற அலைப்பேசி எண்ணிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்குமாறு தொழிலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் சாரு தெரிவித்துள்ளார்.

The post ஏப். 19 தேர்தல் அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை: அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : day ,District Election Officer ,Collector ,Charu ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் குறைபாடா?...