வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.16: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் மற்றும் தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களுக்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு, கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு தலைமை வகித்தார். காவல்துறை பொது பார்வையாளர் விவேக் ஷியாம், மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கலெக்டர் சரயு கூறுகையில், ‘கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்களுக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் 169 போலீசாரும், பர்கூர் தொகுதியில் 163 போலீசாரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் 145 போலீசாரும், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் 230 போலீசாரும், ஓசூர் சட்டமன்ற தொகுதியில் 161 போலீசாரும், தளி சட்டமன்ற தொகுதியில் 221 போலீசாரும் என மொத்தம் 1,089 போலீசார் ஈடுபட உள்ளனர்,’ என்றார்.

The post வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: