×

தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது

திருவாரூர், ஏப். 14: பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம், விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது என்று அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் சாரு தெரிவித்துள்ளார். வாக்குசாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குபதிவு அலுவலர்கள் முதல் கட்டம் மற்றும் 2ம் கட்டம் என 2 கட்ட பயிற்சி வகுப்புகள் எற்கனவே நடத்தப்பட்டுள்ள நிலையில் 3ம் கட்ட பயிற்சி வகுப்பானது நேற்று நடைபெற்றது.

இதைமுன்னிட்டு திருவாரூர் தொகுதிக்கான பயிற்சி முகாம் திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளியிலும், நன்னிலம் தொகுதிக்கான பயிற்சி முகாம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா சரஸவதி கல்லூரியிலும் நடைபெற்ற நிலையில், இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் சாரு ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், வாக்குபதிவிற்குரிய படிவங்களை அலுவலர்கள் முழுமையாக பூர்த்தி செய்திட வேண்டும். மாதிரி வாக்குபதிவை பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் காலை 5.30 மணியளவில் நடத்தி முடித்திட வேண்டும். மாலையில் வாக்குபதிவிற்கு பின்னர் வாக்குபதிவு இயந்திரங்கள் மூடும் பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டும், மொத்தத்தில் எவ்வித விதி மீறல்களுக்கும் இடம் அளிக்காமல் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் சாரு தெரிவித்துள்ளார்.

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் ஆர்.பி.ஆர் நிலைக்கதவுகள் மனிதர்களாக பிறந்த அனைவரது அத்தியாவாசிய தேவை உன்னஉணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம்,உண்ண உணவையும்,உடுக்க உடையும், வேலைக்குசென்று சம்பாதிக்கும் தனதுபணத்தில் ஒவ்வொருவரும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ஆனால் வசிப்பதற்குஒரு வீடு அமைவது என்பதுஅனைவருக்கும் அரிதாக உள்ளது. லட்சம் லட்சமாக வியாபாரம் செய்வர்.அரசு பதவியில்இருந்து கைநிறைய சம்பளம்வாங்குவார். ஆனால் அவர்களுக்கு என சொந்த வீடு இருக்காது, சிறிய அளவிலாவது ஒருவீட்டை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் பார்த்து கட்டப்படும்கனவு இல்லத்திற்கு மேலும்அழகு சேர்ப்பது மரத்தினாலான நிலைகள், கதவுகள் தான், வீட்டின் கதவை வடிவமைப்பதில் மிகுந்த அக்கறைகொள்ளப்படுவது உண்டு.கோயில் கட்டிடக்கலைக்கு நிகரான வேலைபாடுகளுடன் கதவுகள் வடிவமைக்கப்படுகிறது. கதவுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையிலும் கதவுகள் வகைபடுத்துகின்றன.வீடு கட்டும்போது செலவைக் குறைப்பது மிக முக்கியமாகும்.

சிலர் ஜன்னல்கள், கதவுகள் செய்ய நிறைய செலவு செய்து பின்னர் அவதிப்படுவர். கதவு ஜன்னல் வாங்குவதில் கூடநாம் செலவை மிச்சப்படுத்தலாம். இவ்வாறு குறைவான விலையில் நிறைவான கதவு கள் வாங்க சிறந்த நிறுவனம்.ஆர்.பி.ஆர்.ஆகும். இங்கு புதிய மரத்தில் இயந்திரங்களைக் கொண்டு புதுப்புது டிசைன்களில் அவர்களின்சொந்த தயாரிப்பில் செய்யப்படுவதால் விலையில் மிகக்குறைவாகவும் தரத்தில் மிக நிறைவாகவும் கொடுக்க முடிகிறது நூற்றுக்கும் மேற்பட்டமாடல்களில் பூ வேலைபாடுகளுடன் கூடிய கதவுகள், கிரில்கிளாஸ் பொருத்திய ஜன்னல்கள் அனைத்து விதமாகமெம்மரின் டோர், உட்டோர் என எல்லா அளவுகளிலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வண்ணங்களில் உடனே வாங்க சிறந்த நிறுவனம் அகும் வாடிக்கையானர்கள் விரும்பும் வகையில் அனைத்து அளவுகளிலும்தயார் நிலையில் உள்ளன.

The post தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,District Election Officer ,Saru ,Dinakaran ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்