×

குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!

புத்தாண்டு என்றாேல உடலிலும், உள்ளத்திலும் ஓர் புத்துணர்ச்சி, மின்சாரம் போன்று பாய்கிறது, ஒவ்வொருவர் உள்ளத்திலும்! சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் கேட்க வேண்டுமா…? அத்தனை குதூகலம் உள்ளங்களில்…!!
எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள்…! புத்துயிர் பெற்றிடும் நம்பிக்கைகள், “மணமாலை சூட ஆர்வம் மிகும் மங்கையர்!!! வரன் அமையுமா…? ” என்ற எதிர்பார்ப்பு! இப்புத்தாண்டிலாவது நல்ல வேலை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் இளைஞர்களும், கன்னியரும்! “மணமகன் வந்து, மாலை சூடி, கைத்தலம் பற்றுவானா? இப்புத்தாண்டிலாவது…?” என ஏங்கும் இளம் பெண்களின் உள்ளத்தில் பொங்கும் ஏக்கம்! இனியாவது, சொந்த வீடு அமையுமா? என எதிர்பார்ப்புடன் குடும்பத் தலைவர்! வாடகை வீட்டில் அவர் படும் துன்பம், அவருக்கலவா தெரியும்? வருடந்தான் பிறந்து விட்டது! இப்புத்தாண்டிலாவது, “பிரமோஷன்” கிடைக்குமா! சம்பளம் ஏறுமா? வறுமை ஒழியுமா? நடுநிலை குடும்பத் தலைவரின் ஏக்கமிது!!!

ஆம்! கோடானு கோடி மக்களுக்கு புத்துயிரும், நம்பிக்கையும் ஊட்டும் “குரோதி” தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது, சித்திரை 1-ம் தேதி (14-4-2024).நமது தமிழ்ப் புத்தாண்டு, வான சாஸ்திர விதிகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்படுகிறது, பல நூற்றாண்டுகளாக. நவக்கிரக நாயகன், பித்ருகாரகன், ஆத்ம, சரீர காரகர் என்றெல்லாம் பூஜிக்கப்படும் சூரிய பகவான், தனது உச்ச ராசியான மேஷ ராசியில் பிரவேசிக்கும் புனித நாளையே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் புண்ணிய தினமாகக் கொண்டாடி வருகிறோம். அன்று, நமது மூதாதையர்களை பக்தியுடன் நினைத்து, பூஜித்து அவர்களின் அருளையும் பெறுகிறோம். அன்று, தர்ப்பணம், பித்ரு பூஜை, எள்ளுடன் கூடிய தீர்த்தம் ஆகியவற்றை அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம். அவர்களுக்கு நாம் சமர்ப்பிக்கும் எள்ளும், தீர்த்தமும் அவர்கள் எந்த உலகில் இருந்தாலும், எத்தகைய பிறவியை எடுத்திருந்தாலும், அவர்களுக்கு அன்னமாகவும் (சாதம்), அமுதமாகவும், தாகத்திற்கு தீர்த்தமாகவும், சூரியனின் மூலம் சென்று அடைகின்றன.

பாரத மக்களின் பண்பாடும், வழக்கமும், ஒவ்வொரு விசேஷ நாளும் தெய்வத்தையும், மறைந்த முன்னோர்களையும், தாய், தந்தையரையும், பெரியோர்களைப் பூஜிப்பதேயாகும். வசதியுள்ளவர்கள், புண்ணிய நதிகளில், நீராடுவதும், திருக்கோயிலுக்குச் சென்று, ெதய்வ தரிசனம் செய்வதும் ஆகும். நவக்கிரக சஞ்சார நிலைகளின் அடிப்படையில்தான், உலகில் பருவங்களும் மாறி, மாறி வருகின்றன. ஒவ்வொரு பருவத்தையும் “ருது” – எனக் கூறுகிறது, வான சாஸ்திரமாகிய ேஜாதிடக் கலை. கிரகங்கள் ஒவ்வொரு ராசியையும் கடக்கும்போது, அவற்றின் வீரியம் மாறுபடுகிறது, இதனையே அவற்றின் “உச்சம், மற்றும் நீச்சம்” என விவரிக்கிறது, ஜோதிட சாஸ்திரம். இவற்றின் காரணமாகத்தான், நவக்கிரகங்களின் தாக்கமும் (effect) ஏற்படுகிறது. இத்தகைய தாக்கத்தின் அடிப்படையில்தான் ஒவ்வொரு வருடமும் கிரகங்களின் ஆதிக்கத்தை வரிசைப்படுத்துகிறது ேஜாதிடம் எனும் மிகத் துல்லியமான வானியல் கலை. இந்த விதி (rule) களின்படி, இந்த ஆண்டில் நவக்கிரகங்கள் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் வீரியத்தின் அடிப்படையில்!”

ஆண்டின் ராஜா!

ராஜா : செவ்வாய்
மந்திரி : சனி பகவான்
அர்க்காதிபதி : சனி பகவான்
மேகாதிபதி : சனி பகவான்
தான்யாதிபதி : குரு பகவான்
ஸாங்யாதிபதி : செவ்வாய்

இவற்றின்போது, பொதுப்பலன்கள்!

செவ்வாய்: பூமிகாரகர், ஆதலால், அனைத்துப் பயிர்களும், பழச்செடிகளும், மலர்களும், காய்கறி வகைகளும், மூலிகைகளும் செழித்து வளரும். விவசாயம் தழைத்தோங்கும். சனி பகவானின் ஆதிக்கத்தினால், நல்ல மழை பொழியும்.

குரு பகபவான் தான்யாதிபதியாக விளங்குவதால், தானியங்கள், புஷ்பங்கள் ஆகியவற்றின் விளைச்சல் அதிகரிக்கும். அவற்றின் விலை கணிசமாகக் குறையும். எண்ணெய் வகைகளின் விலையும் குறையும். ஆயினும், விவசாயிகள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள், சேனாதிபதியாக சனி பகவான் விளங்குவதால் இந்திய ராணுவம், நவீன ஆயுதங்களைப் பெற்று, பலம் வாய்ந்து திகழும். இந்திய, மற்றும் சீன நாடுகளுக்கு இடைய எல்லை மோதல்கள் நிகழும். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும். உலக வல்லரசுகளில் ஒன்றாகத் திகழும் பாரதம், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்கும். மக்களிடையே தெய்வபக்தி, தேச பக்தி செழித்தோங்கும். கால்நடைகள் – குறிப்பாக, பசுக்கள் நன்மையடையும்.

குரோதி புத்தாண்டின் விசேஷ அம்சங்கள்!

(1) இந்தப் புத்தாண்டில், குரு, சனி, ராகு, கேது ராசி மாறுதல் கிடையாது!

(2) இந்த ஆண்டில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழவுள்ளன. ஆயினும், இவற்றில் ஒன்றுகூட நம் இந்தியத் திருநாட்டில் தெரியாது.

இவ்விதம் கி்ரகங்கள் அனைத்தும் வலம் வரும் போது, சில தருணங்களில், அரிய கிரக சேர்க்கைகள் நிகழ்கின்றன. அவை பூமியையும், பூமியில் வசிக்கும் மக்களையும் பெருமளவில் பாதிக்கின்றன. முதலாவது உலக மகாயுத்தம், இரண்டாவது உலகப் போர், தாது வருஷத்தில் நம் நாட்டில் ஏற்பட்ட பஞ்சமும், பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிகழ்ச்சி, இந்தியா, பாகிஸ்தான் போர், யுகங்கள், யுகங்களாக ஒன்றாக, ஒரே நாடாகத் திகழ்ந்த பாரதம், பிளவு பட்டது, வங்காளத்தில் ஏற்பட்ட பிளேக் நோய், உலகையே கடுமையாக பாதித்த கொடூர “கொரோனா” தொற்று நோய் ஆகிய நிகழ்ச்சி காரணமாக, ஏராளமான மக்கள் உயிரிழந்ததும் மக்களறிவர். சமீப கால உதாரணமாக, ரஷ்ய, உக்ரைன் போரின் மூலம் பல நகரங்கள் நாசமடைந்ததும், பல லட்சம் மக்கள் நாட்டை விட்டு ஓடியதும்.

அத்தகைய அரிய கிரக சேர்க்கை இத்தமிழ்ப் புத்தாண்டில் பங்குனி 14-ம் தேதிக்கு சரியான ஆங்கில தேதி 28-3-2025 மாலை முதல், 16-ம் தேதி (30-3-2025 பிற்பகல்) வரை நிகழ்கிறது. சூரியன், சந்திரன், சுக்கிரன், ராகு ஆகிய நான்கு சக்தி வாய்ந்த கிரகங்கள் மீன ராசியில் இணைகின்றன. அதன் விளைவு, உலக மக்களைப் பாதிக்கக்கூடும். இருப்பினும், இந்த கிரகச் சேர்க்கை, குரு பகவானின் ஆட்சி வீடாகத் திகழ்வதால், தோஷம் வெகுவாகக் குைறகிறது. குறிப்பாக, ராகுவினால் ஏற்படும் தோஷம், குைறகிறது. இருப்பினும், தோஷம், தோஷம்தான்! மீன ராசி, சிம்ம ராசி, தனுர் ராசியினர் அன்றைய தினம் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபத்தில் சிறிது நெய் அல்லது, நல்லெண்ணெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வருவது நல்ல பரிகாரமாகும். பசுவிற்கும், ஏழை எளியவர்க்கும் அன்று உணவளிப்பது நல்ல பலனையளிக்கும்.

(மீனம், சிம்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகும். தனுர் ராசிக்கு, அர்த்தாஷ்டகம் , மீனம் ஜென்ம ராசி ஆதலால், பரிகாரம் கூறியுள்ளோம்.)

இந்தாண்டு முழுவதும், கிரகண தோஷம் ஏற்படாது. ஆதலால், சாந்தி செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை! கும்பம், மீனம், விருச்சிகம் ஆகிய ராசியினர், சனிக்கிழமைதோறும் ஆலயம் ஒன்றில் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்த்து, தரிசித்துவிட்டு வருவது, சனி பகவானின் தோஷத்தையும், ராகுவினால் ஏற்படும் பாதிப்பையும் போக்கிவிடும். திருக்கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்கள் வீட்டின் பூஜையறையிலேயே, சனிக்கிழமைதோறும், மாலையில் இந்த அரிய பரிகாரத்தைச் செய்து வரலாம்.

இனி, இந்தத் தமிழ்ப் புத்தாண்டில், ஒவ்ெவாரு ராசியினருக்கும், நவக்கிரகங்கள், எத்தகைய பலன்களை அளிக்கவுள்ளார்கள் என்பதை “சோடஸ ஸதவர்க்கம்” என்னும், மிக, மிகத் துல்லிய, புராதன கணித முறை மூலம் ஆராய்ந்து பார்த்து, எமது வாசக அன்பர்களின் நல்வாழ்க்கையை மட்டுமே கருத்தில் கொண்டு, கீழே சமர்ப்பித்துள்ளோம்.

பொங்கல் பண்டிகை!!

தை 1 (14-1-2025) குரோதி புத்தாண்டு, தை மாதம் 1-ம் தேதி, செவ்வாய்க்கிழமை, கிருஷ்ணபட்சம் (தேய் பிறை), பிரதமை திதி, பூசம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில், பகல் மணி 12.37க்கு சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசம். உத்தராயண புண்ணிய காலம், மகர சங்கராந்தி.

புதுப்பானையை நன்னீரால் சுத்தம் செய்து, குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, கரும்பு, புஷ்பங்களால் அலங்கரித்து, பகல் 12.05க்கு மேல் 12.52-க்குள் பொங்கல் பானை வைக்க மிகவும் உத்தமமான முகூர்த்தம் அகும்.

சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி, நமஸ்கரிக்கவும். பின்பு பொங்கல் பிரசாதம் எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும், ெசல்வம் சேரும்.

தை 2 (15-1-2025) மாட்டுப்பொங்கல்: நம்மை ஈன்ற தாய்க்கு இணையாக, நமக்கு பால் அளித்து, பல வகைகளிலும் உதவும் பசுக்களையும், காளைகளையும், கன்றுகளையும், நீராட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு, மலர் மாலைகளால் அலங்கரித்து, உணவளித்து, கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டிய, மகத்தான புண்ணிய தினம். பாவங்கள் அனைத்தும் அடியோடு தீரும். நோய்கள் பறந்தோடும்.

தை 3 (16-1-2025) காணும் பொங்கல்: தாய், தந்தையர், பெரியோர்கள் ஆகியோரை வணங்கி, ஆசி பெறவேண்டிய புண்ணிய தினம். பெறற்கரிது பெரியோர் ஆசி! இளைஞர்-இளங்கன்னியர்களுக்கு கல்விச் செல்வம் கிட்டும். நல்ல உத்தியோகம் கிடைக்கும். எந்தக் குடும்பத்தில் பெரியோர்கள் வணங்கப்படுகிறார்களோ, அந்த வீட்டில் செல்வம் செழிக்கும், மகிழ்ச்சியும், மன நிறைவும் பொங்கும்.

குரோதி தமிழ்ப் புத்தாண்டின் முக்கிய பண்டிகைகள்!!

சித்திரை 1 (14-4-2024)
தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு
சித்திரை 10 (23-4-2024)
சித்திரா பவுர்ணமி
ஆடி 13 (29-7-2024)
ஆடிக் கிருத்திகை
ஆடி 22 (7-8-2024) ஆடிப்பூரம்
ஆவணி 10 (26-8-2024) கோகுலாஷ்டமி
ஆவணி 22 (7-9-2024)
விநாயகர் சதுர்த்தி
புரட்டாசி 17 (3-10-2024)
நவராத்திரி ஆரம்பம்
புரட்டாசி 25 (11-10-2024)
சரஸ்வதி பூஜை
புரட்டாசி 26 (12-10-2024) விஜயதசமி
ஐப்பசி 13 (30-10-2024) நரகசதுர்த்தி
ஐப்பசி 14 (31-10-2024)
தீபாவளிப் பண்டிகை
ஐப்பசி 21 (7-11-2024)
ஸ்கந்தர் சஷ்டி (சூரஸம்ஹாரம்)
கார்த்திகை 28 (13-12-2024)
அண்ணாமலையார் தீபம்
மார்கழி 15 (30-12-2024)
அனுமன் ஜெயந்தி
மார்கழி 26 (10-1-2025)
வைகுண்ட ஏகாதசி
மார்கழி 27 (11-1-2025) கூடாரவல்லி
தை 22 (4-2-2025) ரத சப்தமி
தை 29 (11-2-2025) தைப்பூசம்
மாசி 14 (26-2-2025)
மஹா சிவராத்திரி
மாசி 28 (12-3-2025) மாசி மகம்
பங்குனி 28 (11-4-2025)
பங்குனி உத்திரம்

The post குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு! appeared first on Dinakaran.

Tags : New Year ,Mangaiyar ,
× RELATED துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன்...