மக்களவை தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு: முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

சென்னை: மக்களவை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தியாகராயர் நகரில் உள்ள தனியார் ஓட்டலில் தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். அதில்; நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும். ஒன்றிய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கை மாநிலங்களுக்கு கொடுக்க பாமக பாடுபடும்.

காவிரி-கோதாவரி இணைப்பை செயல்படுத்துதல்; மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்தல். தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்குப் பெறுதல்; 22 மொழிகளுக்கும் அலுவல் மொழித் தகுதி பெறுதல். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைத்தல். சென்னையில் உச்சநீதிமன்ற கிளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் துறை, நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும். ஒன்றிய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்றிய அரசு பணிகளில் இடைநிலை பணிகளில் 50%, கடைநிலை பணிகளில் 100% தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். ரூ.10 லட்சம் வரை வருமான வரி இல்லை. மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது குறித்து ஆராய்ந்து பரிந்துரைக்க புதிய ஆணையம் அமைக்கப்படும். தன்னாட்சியும், சமூகநீதியும் தழைக்கும் தமிழ்நாட்டை உருவாக்குவோம். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை’ என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும். கூட்டணிக்குள் இருந்தாலும் எங்கள் கொள்கை, சித்தாந்தங்களை விட்டுக் கொடுக்க முடியாது.

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்திட பாமக வலியுறுத்தும். உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும் இவ்வாறு கூறினார்.

The post மக்களவை தேர்தலுக்கான பாமகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு: முக்கிய அம்சங்கள் என்னென்ன..? appeared first on Dinakaran.

Related Stories: