மக்களவை தேர்தல் பரப்புரைக்காக விரைவில் தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: ராகுல் காந்தி மக்களவை தேர்தல் பரப்புரைக்காக விரைவில் தமிழ்நாடு வருகிறார் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் தமிழகம் 9, புதுச்சேரி என 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு தொகுதிக்கு வேட்பாளரை இறுதி செய்யும் பணியில் காங்கிரசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; மக்களவைத் தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நெல்லை, திருவள்ளூர், விளவங்கோடு தொகுதிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை தொகுதி காங் வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படுவார். ராகுல் காந்தி விரைவில் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர உள்ளார்; ஓரிரு நாளில் தேதி வெளியிடப்படும். ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழ்நாட்டில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் ராகுல்காந்தி பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

The post மக்களவை தேர்தல் பரப்புரைக்காக விரைவில் தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: