வேட்பு மனு தாக்கலின்போது பாஜ, அதிமுக, தேமுதிகவினர் போலீசாருடன் தள்ளுமுள்ளு

அண்ணாநகர்: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு, அண்ணாநகர் மண்டல அலுவலகக்தில் நேற்று பாஜ மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். அப்போது பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு அலுவலகத்துக்குள் செல்ல முயன்றார். அப்போது போலீசாருக்கும், பாஜவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு போலீசார் ஒலிப்பெருக்கி மூலம், வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவித்தனர். பின்னர் வேட்பாளருடன் 5 பேர் அனுமதி பெற்று உள்ளே சென்றனர். இதனைத் தொடர்ந்து தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காலை 10 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை வராததால் அதிமுக தொண்டர்கள் சுமார் 4 மணி நேரம் காத்துக் கிடந்தனர். இந்த சம்பவத்தால் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு தேமுதிக சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றதால், போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாதவாறு இரும்பு தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் தேமுதிக தொண்டர்கள் மற்றும் போலீசாருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வேட்பாளருடன் 5 பேர் மட்டும் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அப்போது தேமுதிக மற்றும் அதிமுகவினர் நாங்களும் உள்ளே செல்ல வேண்டும் என்று கோஷம் போட்டனர். பின்னர் இரும்பு தடுப்புகளை மீறி உள்ளே சென்றபோது போலீசாருக்கும், தேமுதிக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வேட்பாளருடன் 5 பேர் மட்டும் உள்ளே சென்று வேட்பு மனு தாக்கல் செய்து விட்டுச் சென்றனர்.

The post வேட்பு மனு தாக்கலின்போது பாஜ, அதிமுக, தேமுதிகவினர் போலீசாருடன் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.

Related Stories: